சவூதியில் 3 அறிஞர்களுக்கு விரைவில் மரண தண்டனை

சவூதி அரேபியாவின் மூன்று முன்னணி அறிஞர்கள் மீது பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஷெய்க் சல்மான் அல் அவுதா, அவாத் அல் கார்னி மற்றும் அலி அல் ஒமரி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு அடுத்த மாதம் முடிவடையும் முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்திற்குப் பின் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக இரு அரச தரப்புகள் மற்றும் செய்தி ஊடகத்தைச் சேர்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இது பற்றி சவூதி நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சவூதி கடந்த மாதம் 37 பேர் மீது மரண தண்டனை நிறைவேற்றியது. இருவர் பொது இடத்தில் சிலுவையில் அறையப்பட்டு எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டது.

கூட்டாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து ஐ.நா கண்டனம் வெளியிட்டிருந்தது.

2018 இல் சவூதி அரேபியாவில் 148 பேர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை