புதைகுழி ஒன்றில் 35 சடலங்கள் மீட்பு

மெக்சிக்கோ மாநிலமான ஜாலிஸ்கோவில் புதைகுழிகளில் குறைந்தது 35 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொல்லப்படுவதற்கு முன்னர் அவர்களின் கைகள் கட்டப்பட்டிருந்ததாகத் தடயவியல் புலனாய்வில் தெரிய வந்தது. மாண்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அது தொடர்பில் இதுவரை 4 சந்தேக நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2006ஆம் ஆண்டில் போதைப்பொருளுக்கு எதிரான மெக்சிக்கோவின் போர் ஆரம்பமானது. அப்போதிலிருந்து இதுவரை 40,000 பேர் காணாமல் போயினர். அவர்கள் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை