வில்பத்து காடழிப்பு மனு ஜூலை 31 இல் மீண்டும் விசாரணை

பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தை அழித்துமக்களை குடியமர்த்துவதற்காக வழங்கப்பட்டகாணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடவேண்டுமெனக் கோரி தாக்கல் செய்த மனுவை ,ஜுலை 31 ஆம் திகதி முதல் ஆரம்பத்திலிருந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம் எடுத்துள்ளது.

வில்பத்து வனத்தை அண்மித்த பகுதிகளில் மக்களை குடியமர்த்த சட்டவிரோதமாக காணிகளை வழங்கியமை தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு சுற்றுச்சூழல் நீதி மையம் என்ற அமைப்பினால் கடந்த 2015 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு,மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் விசாரிக்கப்பட்டு நிறைவு ​செய்யப்பட்டது.ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவிருந்தது. 
இந்நிலையில்மீண்டும் இம்மனுவை விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி ஜனக் டி சில்வா மற்றும் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்ட விரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால்,சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மனுதாரர்கள் குறித்த மனுவில், சுட்டிக்காட்டியிருந்தனர்.

Tue, 05/28/2019 - 12:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை