பேராதனைப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பம்

பேராதனைப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக  உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தலைமையில்  கூடிய பீடாதிபதிகள் குழு இந்த முடிவினை எடுத்துள்ளது.

மேலும் மாணவர்களை   21ஆம் திகதி  விடுதிகளுக்கு வருமாறு அறிவித்துள்ளனர்.    இந்நிலையில் நேற்று மாலை பேராதனைப் பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் சுற்றி  வளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இராணுவத்தினர் பல பஸ்வண்டிகள் கொண்டு வந்து  குவிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளில்களில் இயந்திர துப்பாக்கிகளுடன்  இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  முகாமைத்துவ பீடம்,  கலைப்பீடத்தின் ஒரு பகுதி, சில விடுதிகள், விளையாட்டு மைதானப் பகுதி ஆகியன  சோதனையிடப்பட்டன. இதேவேளை  விடுமுறைக் காலத்தில் சி.சி.டி.வி கெமராக்கள் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. 

(கண்டி தினகரன் சுழற்சி நிருபர்)   

Sat, 05/18/2019 - 09:46


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக