சீனாவுக்காக வேவுபார்த்த அமெ. உளவாளிக்கு 20 ஆண்டு சிறை

சீனாவுக்காக வேவுபார்த்த முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிக்கு 20 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

62 வயது கேவின் மெலரி இரகசிய அமெரிக்கப் பாதுகாப்பு விபரங்களைச் சீனப் புலனாய்வு அமைப்புக்கு 25,000 டொலருக்கு விற்றுள்ளார்.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் ஷங்ஹாயிற்குப் பயணம் மேற்கொண்டபோது, அந்தப் பரிவர்த்தனை நடந்தது.

சீன மொழியைச் சரளமாகப் பேசும் மெலரி அமெரிக்க இராணுவத்தில் சேவையாற்றினார். பாதுகாப்புச் சேவையில் சிறப்பு அதிகாரியாகவும் அவர் பணிபுரிந்தார்.

பின்னர் அவர் மத்திய உளவு ஆணையத்தின் அதிகாரியாகப் பணிமாற்றப்பட்டார்.

“கெவின் மல்லோரி நாட்டை மட்டுமல்லாது, நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரையே பணயம் வைப்பவர்களின் பாதுகாப்பையும் ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளார்” என்று அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் சச்சாரி டெர்விலிகர் தெரிவித்துள்ளார். இந்த மாத ஆரம்பத்தில் சி.ஐ.ஏ முன்னாள் அதிகாரி ஜெர்ரி சன் சிங் என்பவரும் சீனாவுக்கு உளவு பார்த்த குற்றத்தை ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை