2029 இல் பூமியை நெருங்கும் 1,110 அடி அபாபிஸ் விண்கல்

அடுத்த ஒரு தசாப்தத்தில் பூமிக்கு மிக நெருக்கமாக பயணிக்கவிருக்கும் விண்கல் ஒன்றை எதிர்கொள்ள விஞ்ஞானிகன் இன்றே தயாராகி வருவதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

பண்டைய எகிப்து கடவுளான ‘அபாபிஸ்’ என்ற பெயர் கொண்ட 1,110 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று 2029 ஏப்ரல் 29 ஆம் திகதி பூமிக்கு மிக மிக நெருக்கமாக பயணிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கல் பூமியின் மேற்பரப்பில் இருந்து 19,000 மைல்கள் நெருக்கமாக வரவுள்ளது. இது தற்போது பூமியை சுற்றிவரும் சில செயற்கைக் கோள்கள் நிலைகொண்டுள்ள தூரம் என்று நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் ஈபல் கோபுரத்தை விடவும் பெரிதான இந்த விண்கல் பூமியைத் தாக்கும் சாத்தியத்தை ஆய்வாளர்கள் நிராகரித்துள்ளனர். இது பூமியை நெருங்குவது விண்கல் பற்றி ஆய்வு நடத்துவதற்கு அரிதான சந்தர்ப்பம் என்று பார்க்கப்படுகிறது.

இந்த விண்கல் பூமியை கடக்கும்போது வெறுங்கண்ணால் பார்க்க முடியும் என்றும் நட்சத்திரம் ஒன்று நகர்ந்து செல்வது போல் தெரியும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை