2020 ஆசிய கிண்ண தொடர்: உரிமையை பெற்றது பாகிஸ்தான்

2020-ம் ஆண்டுக்கான ரி 20 ஆசிய கிண்ண தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும்.

கிரிக்கெட் விளையாடும் ஆசிய நாடுகளுக்கு இடையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 50 ஓவராக நடத்தப்பட்ட ஆசிய கிண்ணத்தை இந்தியா நடத்தியது. பாகிஸ்தான் - இந்தியா இடையில் அரசியல் தொடர்பான பிரச்சினை இருந்து வருவதால் போட்டி இந்தியாவில் நடத்தப்படாமல், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த வருடம் ரி 20 உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியாவில் நடக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இந்தத் தொடர் கருதப்படுகிறது.

Fri, 05/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை