ஐபிஎல் 2019-ல் பதிவான சாதனை துளிகள்

ஐபிஎல் 2019 கிண்ணத்தை மும்பை அணி கைப்பற்றிய நிலையில் இந்த பருவகாலத்தில் பதிவான சாதனைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஐபிஎல் 2019 பருவகாலத்தில் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 4-வது முறையாக சம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தட்டிச் சென்றது.

2-வது இடத்தை பிடித்த சென்னை அணி 3 முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த ஐபிஎல் பருவகாலத்தில் பதிவான சாதனை துளிகள் பற்றிய விவரத்தை பார்க்கலாம்.

இந்த ஐபிஎல் பருவகாலத்தில் மொத்த ஆட்டம் - 60

சிக்சர்கள் - 785

பவுண்டரிகள் - 1651

விக்கெட்டுகள் - 682

ஓட்டங்கள் - 19416

சதங்கள் - 6

அரைச் சதம் - 106

அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் டெல்லி அணியை சேர்ந்த ஷிகர் தவான் - 64

 

அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் கொல்கத்தா அணியை சேர்ந்த ரஸல் - 52

 

அதிக பவுண்டரிகள் அடித்த அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் - 236

 

அதிக சிக்சர்கள் விளாசிய அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 143

ஒரு அணியின் அதிக பட்ச ஸ்கோர் 232/2 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 

ஒரு அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் 70 பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ்.

Tue, 05/14/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக