நம்பிக்கையில்லா பிரேரணை; ஜூன் 18,19இல் விவாதம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஜூன் 18,19 ஆம் திகதிகளில் நடைபெறுமென சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட இணக்கப்பாட்டுக்கமைய இத் திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார  இது தொடர்பில் சபாநாயகரிடம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்

நேற்று முன்தினம் இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதன்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து 40 க்கும் மேற்பட்டவர்கள் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர்

மேற்படி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றைய தினம் வியாழக்கிழமை அதற்கான திகதியை அறிவிப்பதாக நேற்று முன்தினம் சபையில் உறுதியளித்திருந்தார்.

அதற்கிணங்க நேற்று இந்த அறிவித்தலை சபாநாயகர் சபையில் வெளியிட்டபோது எதிர்க்கட்சியினர் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். எனினும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவுக்கிணங்க முறைப்படி அதற்கான திகதியை நிர்ணயித்துள்ளதாகவும் அதை மாற்ற முடியாது என்றும் அவர் நேற்று சபையில் உறுதியாக தெரிவித்தார்.

இதற்கிணங்க அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஜூன் 18 19ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை