பிரேசில் சிறைக்குள் கலவரம்: 15 பேர் பலி

பிரேசில் நாட்டில், சிறைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 15 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் வடக்கு மாநிலமான அமேசானாஸின் மானாஸ் பகுதியில் அனிசியோ ஜோபிம் சிறைச்சாலையில் இந்தக் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இந்த சிறையில் கடந்த ஞாயிறு திடீரென கைதிகளிடையே கலவரம் ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்குள் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

தகவல் அறிந்து விரைந்த சிறை காவலர்கள், கைதிகளுடன் போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த கலவரத்தில் 15 கைதிகள் உயிரிழந்த நிலையில், அசம்பாவிதத்தை தவிர்க்க ஹெலிகொப்டர்கள் மூலம் பொலிஸார் சிறையை கண்காணித்து வருகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு இதே சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில், 56 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் பெரும் எண்ணிக்கையான கைதிகள் தொகை உள்ள நாடான பிரேசிலில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 712,305 கைதிகள் இருத்ததாக உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது.

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை