ஈபில் கோபுரத்திற்கு 130 ஆண்டுகள் பூர்த்தி

ஈபில் கோபுரம் முதன்முதலில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை வண்ணமயமான ஒளிக்காட்சியுடன் நேற்று முன்தினம் பாரிஸில் கொண்டாடினர்.

1889 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி கட்டப்பட்டு அதே ஆண்டு மே 15ஆம் திகதி ஈபில் கோபுரம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

கோபுரம் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஏழு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது. 324 மீற்றர் உயரம் கொண்ட ஈபில் கோபுரம் 1889 ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை உலகின் மிக உயரமான கோபுரம் என்ற பெயரைப் பெற்றிருந்தது.

1930ஆம் ஆண்டு நியூயோர்க்கின் கிரைஸ்லர் கட்டடம் எழுப்பப்படும்வரை ஈபில் கோபுரத்திற்கு அந்தப் பெருமை கிடைத்தது.

Fri, 05/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை