அழிவின் விளிம்பில் உலகில் 10 இலட்சம் உயிரினங்கள்

உலகில் சுமார் 10 இலட்சம் எண்ணிக்கையிலான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த குழு ஒன்று 50 நாடுகளில் 145 நிபுணர்களை கொண்டு பல்லுயிர்களின் பெருக்கம் குறித்து நடத்திய ஆய்வின் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் மனித வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தாவரங்கள், விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் என பல்லுயிர்கள் அழிவின் விளிம்பை நோக்கி வேகமாக சென்று கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் அறிக்கையின் படி உலகில் 4இல் ஒரு பங்கு விலங்குகள், பறவைகள் அழிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மிகவும் அரியவகை என கருதப்படும் டிட்டிகாகா நீர் தவளை, கருப்புக் கொண்டை குரங்கு இனங்கள், பிலிப்பியன் கழுகு, ரோயல் ஆமை, தாபிர், சிபாகா குரங்கு, சுமத்திரன் காண்டாமிருகம் உள்ளிட்ட இனங்களும் வேகமாக அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை