படையினருடன் 10 ஆயிரம் சிவில் பாதுகாப்பு பிரிவினரும் தேசிய பாதுகாப்புப் பணியில்

தேசியப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள முப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக 10ஆயிரம் சிவில் பாதுகாப்பு சிப்பாய்களும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்  தாக்குதல் சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள நிலையில், தேசியப் பாதுகாப்புக்காக அர்ப்பணித்துவரும் முப்படையினர் மற்றும் பொலிஸாருடன் சிவில் பாதுகப்புப் படையும் ஈடுபட்டுள்ளது.  

சிவில் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகமவின் ஆலோசனைக்கமைய இராணுவக் கட்டளைத் தளபதிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் நாடுமுழுவதுமுள்ள விகாரைகள், பள்ளிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள்,பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களின் பாதுகாப்பில் சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். 23 சிவில் படைபிரிவுகளின் 10,247 சிப்பாய்கள் இவ்வாறு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், மாஓயா, வெளிஓயா, ஹொரவபெத்தானை, கெபிட்டிகொல்லாவ, மெதிரிகிரிய, மொணராகலை, புத்தளம், அம்பாறை, சேருவில, கந்தளாய், உஹன, வவுனியா, வில்பத்து, கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு சிவில் பாதுகாப்புப் பிரிவினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

(சுப்பிரமணியம் நிஷாந்தன்)

Tue, 05/07/2019 - 12:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை