திண்ம உணவுகளில் ஜூன் 01 முதல் நிறக் குறியீடு அமுல்

உணவுப் பண்டங்களில் காணப்படும் சீனி, உப்பு, கொழுப்பு உள்ளடக்கங்களின் அளவுகளை காட்சிப்படுத்துவது எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, பிஸ்கட் உள்ளிட்ட திண்ம மற்றும் அரைத் திண்ம உணவுகளில் உள்ளடக்கப்படும் சீனி, உப்பு மற்றும் கொழுப்பின் அளவுகளை நிறக் குறியீட்டின் மூலம் காட்சிப்படுத்துவது அவசியமாகும்.

நாட்டில் தற்போது அதிகரித்துள்ள தொற்றா நோய்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளோர் தமது அன்றாட உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கு இதன் மூலம் வழி ஏற்படுத்தப்படுமென எதிர்பார்ப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் திண்ம மற்றும் அரைத் திண்ம உணவுகளில் உள்ளடக்கப்படும் சீனி, உப்பு மற்றும் கொழுப்பின் அளவுகளை நிறக் குறியீட்டின் மூலம் காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்.
 

Wed, 05/29/2019 - 14:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை