Header Ads

ICC கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகள் 2019 தேசத்தை ஒன்றுதிரட்ட கொக்கா கோலா திட்டம்

ICC மற்றும் Coca-Cola அண்மையில் உலகப் புகழ்பெற்ற விளையாடடுப் போட்டிக்களுள் ஒன்றான கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அதன் பிரீமியர் நிகழ்வுகளை கொண்டாடி உலகளாவிய மூலோபாய கூட்டிணைவுக்குள் நுழைந்தது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ICC மற்றும் அதன் அனைத்து போட்டிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அல்கஹோல் அற்ற குடிபான வகைப் பங்காளியாக Coca-Cola கம்பனியின் வர்த்தக நாமம் உள்ளது.

உலகக் கிண்ணத்தை நோக்கிச் செல்லும் இந்த வேளையில் உலகக் கிண்ணப் போட்டிகள் 2019 இல் தமது சாதனைகளை படைத்திட இலங்கை கிரிக்கெட் அணியை ஊக்குவிப்பதற்காக இலங்கை முழுவதும் உள்ள தமது இரசிகர்களுக்கு ஒன்று திரளுமாறு Coca-Cola ஆனது Drink of Togetherness என்னும் பிரசாரத் திட்டத்தின் மூலம் அழைப்பு விடுக்கின்றது. ICC உலகக் கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் 2019 நேரடி அனுபவத்தை பெற வாய்ப்பளித்திட இலங்கையின் கிரிக்கெட் இரசிகர்களுக்கு From Cap to Cup எனும் சலுகைத் திட்டத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கூட்டிணைவு பற்றிய தகவல்களை அண்மையில்

சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின் போது அறிவித்தது. Coca-Cola கம்பனியின் வலுவும் மற்றும் 500க்கும் மேற்பட்ட பலவகைப்பட்ட வர்த்தக நாமங்களைக் கொண்டுள்ள போர்ட்போலியோவும் ICC உடனான இந்த கூட்டிணைவுடன் உலகளாவிய ரீதியில் விளையாட்டுத் துறையில் கால் பதித்திட வழிவகுப்பதுடன் அதனை பிரபலய்ப்படுத்தவும் உதவுகிறது. இரண்டு நிறுவனங்களுக்கும் மூலோபாய ரீதியாக இதுவோர் நீண்ட கால கூட்டிணைவாகவும் திகழ்ந்திடும்.

இந்ந்கழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்நிகழ்வைப்பற்றி கருத்துத் தெரிவிக்கையில், “கிரிக்கெட் விளையாட்டானது நாட்டின் விளையாட்டு சார் இதயத்துடிப்பினை உருவாக்குகிறது. எதிர்வரும் ICC உலகக் கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் 2019 இன் போது அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக வந்து எமது இலங்கை அணி வீரர்களை உற்சாகப்படுத்திட வேண்டும் என்பதற்காக இலங்கை கிரி்க்கெட் அணியை வாழ்த்திட இலங்கை கிரிக்கெட் இரசிகர்களை ஒன்றாக அணித்திரட்டிடும் Coca-Cola வுக்கு நான் விஷேடமாக எனது நன்றிகளைத் தெரிவித்திட விரும்புகின்றேன்.”

மேலும் இலங்கை கிரிக்கெட் இன் நிர்வாகக் குழுவின் உதவிச் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த Coca-Cola வின் இவ்வாதரவினைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், Coca-Cola இலங்கையின் கிரிக்கெட் துறைக்கு வழங்கும் ஆதரவு நீண்ட கால வரலாற்றினைக் கொண்டுள்ளது. கம்பனி ரீதியாக மட்டுமின்றி உத்தியோகபூர்வ கார்பனேட் செய்யப்பட்ட குடிபான வகை அனுசரணையாளராகவும் திகழ்ந்து வருகிறது. 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் வெற்றியின் போதும் உலகளாவிய பங்காளியாக Coca-Cola வின் நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் இவ்விளையாட்டுத் துறைக்கும் அதன் அபிவிருத்திக்கும் இந்நிறுவனமானது பெரும் பங்களிப்பினை வழங்கியும் வருகிறது. இந்த பிரசாரத் திட்டத்தின் மூலம் Coca-Cola வுடன் ஒன்றாக இணைந்து செயற்பட்டு தேசிய கிரக்கெட் அணிக்கு எமது ஆதரவினை வழங்கிட நாம் காத்திருக்கிறோம்.

இக்கூட்டணைப்பினைப் பற்றி ICC யின் பிரதான நிறைவேற்று அதிகாரி மனு சௌனி கருத்து தெரிவிக்கையில், “நாம் Coca-Cola வுடன் கூட்டிணைந்து மகிழ்வதுடன் உலகெங்கிலுமுள்ள அதிகமான மக்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு மீதான அன்பினை மேலும் அதிகப்படுத்துகிறோம். எதிர்வரும் Coca-Cola உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட விருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியினை உற்சாகப்படுத்திடவும் அதைக் கொண்டாடிடவும் அனைத்து பிராந்தியங்களிலுமுள்ள மக்களையும் இரசிகர்களையும் ஒன்று திரட்ட காத்திருக்கிறோம்.

இந்நிகழ்வினைப் பற்றி Coca-Cola வின் உபதலைவர் தென்மேற்கு ஆசிய தொழிற்பாடுகள், கருத்து தெரிவிக்கையில், “கிரிக்கெட் ஆனது ஒரு உலகளாவிய விளையாட்டு மற்றும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்ளும் ஓர் அர்வமிகு செயற்பாடும் ஆகும்.

பாலினம், தலைமுறைகள் மற்றும் கலாசாரங்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு இவ்விளையாட்டு மீதான காதல் மேலோங்குகிறது. உலகளாவிய ரீதியான விளையாட்டு போட்டிகளில் மற்றும் நிகழ்வுகளில் ICC உடனான எமது கூட்டிணைவுகள் சார்ந்த நீண்ட கால வரலாற்றினைக் கொண்டுள்ளது. இந்த மூலோபாய ரீதியான பங்காண்மையானது விளையாட்டு இரசிகர்களை புதுப்பிக்கும் மற்றும் அவர்களது பொழுதுபோக்கு அனுபவங்களை மேம்படுத்தும் எமது நீண்ட கால உறுப்பாட்டை வலுவூட்டுகிறது” இதுவும் இப்பிரசார காலத்தின் போது இடம்பெறும். இப்பிரசாரம் 2019 ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை இடம்பெறும்.

“நுகர்வோர் எப்போதும் Coca-Cola வின் போர்ட்போலியோவின் மையத்தில் உள்ளனர். நிறுவனமானது அவர்களின் விருப்பத் தேர்வுகளைப் பூர்த்தி செய்வதில் தீவிரமாக உள்ளது. எமது வர்த்தக நாமங்களுடன் மக்களை இணைக்க நாம் எப்போதும் புத்தாக்கமிக்க வழிகளை தெரிவு செய்கிறோம்.

எதிர்வரும் ICC உலகக் கிண்ண போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் 2019 இனை நேரடியாக கண்டு களிக்கவும் அவர்களை மகிழ்வித்திடவும் இக்கூட்டிணைவின் மூலம் நாம் எதிர்ப்பார்க்கிறோம். இதனால் விளையாட்டு மீதான காதல் மேலும் வளர உதவுவதுடன் இலங்கை நுகர்வோரையும் இது ஒன்றாக இணைகின்றது. அத்தோடு லண்டனில் உலகக் கிண்ணத்தை சுவீகரித்திடவும் உற்சாகப்படுத்திடவும் இது உதவுகின்றது.

அதுமட்டுமின்றி ICC உலகக் கிண்ணப் போட்டிகளில் போட்டியிடும் வீரர்களையும் முழு அணியினையும் வாழ்த்திட ஒன்லைன் தளத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் பொது மக்களுக்கு இத்தளத்துக்குச் சென்று பார்வையிடவும் வாழ்த்துக்கைளத் தெரிவிக்கவும் முடியும். தமது வாழ்த்துக்களை தெரிவிக்கவும், பார்வையிடவும் முடியும்” என Coca-Cola Srilanka Private Ltd வின் முகாமைத்துவப் பணிப்பாளர் பங்கஜ் சின்ஹா தெரிவித்தார்.

Thu, 04/11/2019 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.