இந்துமதக் கற்கைகளுக்காக பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுகோள்

இந்துமதத்தைச் சார்ந்தவர்கள் தங்களது மதத்தைப் பற்றிய கற்கைகளை மேற்கொள்ளவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும், இந்துமதம் சார்ந்த பல்கலைக்கழகம் ஒன்றை  உருவாக்குமாறு  யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வேண்டுகோள் விடுத்தார்.

பல்கலைக்கழகமானது அறிவை மேம்படுத்துவதோடு மாத்திரமின்றி, மதத்தைப் பற்றிய ஆர்வமுடையோர் மற்றும் மாணவர்களுக்கு கற்கைகளைத் தொடர்வதற்கான சந்தர்ப்பங்களையும் வழங்குகின்றன. ஆகையால், இலங்கையிலுள்ள பௌத்த பல்கலைக்கழகத்தைப் போன்று, இந்துமதம் சார்ந்த பல்கலைக்கழகம் ஒன்று இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும் எனவும், பாராளுமன்றத்தில் நேற்று அவர் தெரிவித்தார்.

மேலும், மதம் சார்ந்த கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில் வழங்கப்பட வேண்டும் எனவும், அவர் தெரிவித்தார். 

இதேவேளை பௌத்த மத நிகழ்வுகளின்போதும் போயா தினங்களின்போதும், மதுபானக் கடைகள் மூடப்படும் அதேவேளை, இந்துமத நிகழ்வுகளின்போது மதுபானக் கடைகள் இயங்குகின்றன. ஆகவே, ஏனைய மத நிகழ்வுகளின்போதும் குறிப்பாக, இந்துமத மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இந்துமத நிகழ்வுகளின்போது இதே நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Wed, 04/03/2019 - 12:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை