நுவரெலியா காமினி தேசிய பாடசாலை அணி சம்பியன்

பழைய மாணவர் சங்க கிரிக்கட் போட்டியில் நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியை தோற்கடித்து மீண்டும் சம்பியனானது நுவரெலியா காமினி தேசிய பாடசாலை அணி .

கடந்த 9 வருடங்களாக நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படுகின்ற நுவரெலியா புனித சவேரியார் கல்லூரி மற்றும் நுவரெலியா காமினி தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி அண்மையில் நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் நடைபெற்றது.

30 ஓவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிப்பெற்ற காமினி தேசிய கல்லூரி பழைய மாணவர்கள் அணி களத் தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய புனித சவேரியார் பழைய மாணவர் அணி 30 ஓவர் முடிவில் எட்டு விக்கட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்துதாடிய காமினி தேசிய கல்லூரி பழைய மாணவர்கள் அணி 28 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்று சம்பியனாகியது.இப் போட்டியில் சிறந்த வீரராக காமினி தேசிய கல்லூரியைச் சேர்ந்த சந்திமால் தெரிவுசெய்யப்பட்டார். பிரதம அதிதியாக நுவரெலியா மாநகர முதல்வர் சந்தன லால் கருணாரட்ன மற்றும் பிரதி முதல்வர் யதர்ஷனா புத்திரசிகாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.

நுவரெலியா தினகரன் நிருபர்

Wed, 04/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை