அதிக வெப்பம் மே மாத இறுதிவரை நீடிக்கும்

வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை 

நாட்டின் பல பகுதிகளிலும் அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடர்வதால் பொது மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.  

அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை மே மாத இறுதி வரை நீடிக்கும் எனவும், வெப்பநிலை 32பாகை முதல் 41பாகை செல்சியஸ் வரையிலான எல்லைக்குள் உள்ள போது பொது மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.  

அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக தசைப்பிடிப்புடன் அலர்ச்சி ஏற்படலாம் என்றும் வடக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் குறிப்பாக மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கம்பஹா, அம்பாறை மாவட்டங்களிலும் அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை நீடிக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.  

வெளிகளில் வேலை செய்வோர் அடிக்கடி தண்ணீர் அருந்தி நிழலில் ஓய்வெடுப்பது அவசியம் எனவும் முதியவர்களையும் நோயாளிகளையும் பரிசோதிப்பதுடன் பிள்ளைகளை தனியே வெளியில் விடக்கூடாது. என்றும் மெல்லிய வெளிர் நிற உடைகளை அணிவது சிறந்தது எனவும் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.(ஸ)  

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Thu, 04/18/2019 - 09:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை