செவ்வாயில் முதல்முறை நில அதிர்வு அவதானிப்பு

செவ்வாய் கிரகத்தில் முதல்முறை நில அதிர்வு ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் இன்சைட் ஆய்வு கலன் அவதானித்துள்ளது. கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி இந்த அதிர்வு பதிவாகியுள்ளது.

பூமி மற்றும் சந்திரனுக்கு அப்பால் கிரக அமைப்பு ஒன்றின் மேற்பரப்பில் நில அதிர்வு அவதானிக்கப்படுவது இது முதல் முறையாகும். கிரகத்தின் உட்பகுதியில் ஏற்பட்்ட சரிவு ஒன்று அல்லது விண்கல் ஒன்று விழுந்ததன் அதிர்வாக இது இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாசாவின் ஆய்வு கலனான இன்சைட் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கியது. செவ்வாயின் உட்பகுதியின் கட்டமைப்பு பற்றி தெளிவான பார்வை ஒன்றை பெறுவதற்கு பல்வேறு அதிர்வுகளை கண்டறியும் நோக்கிலேயே இந்த ஆய்வு கலன் அனுப்பப்பட்டது.

“முதலாவது செவ்வாய் அதிர்வுக்காக நாம் பல மாதங்கள் காத்திருந்தோம்” என்று இந்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்த பிலிப் லொக்னோனே குறிப்பிட்டுள்ளார். “செவ்வாய் நிலப்பரப்பு தொடர்ந்து இயக்கம் கொண்டதாக இருப்பதற்கு ஆதாரம் கிடைத்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 04/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை