இஸ்ரேல் ஆய்வு விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதம்

இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 'பேரேஷீட்' என்னும் விண்கலம் நிலவின் பரப்பை தொடுவதற்கு முன்னதாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இவ் விண்கலம் நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பது மட்டுமின்றி, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டதாகும். '

இதன் மூலம் நிலவின் மேற்பரப்பை அடைந்த நான்காவது நாடு என்னும் பெருமையை அடைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. இதற்கு முன்னர் சோவியத் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரசுத்துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களின் விண்கலன்களே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன.

 

Sat, 04/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை