நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் மேதினக்கூட்டங்கள் இரத்து - ஈரோஸ்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் ஈரோஸ் (ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் -EROS) ஏற்பாடு செய்திருந்த   மேதினக்கூட்டங்கள் மற்றும் மலையக தியாகிகள் நிகழ்வு ஆகியன இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், குண்டு வெடிப்பில் உயிர்நீத்த உறவுகளுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக ஈரோஸ் அமைப்பின் கொள்கை பரப்புச்செயலாளர் இரா. ஜீவன் இராஜேந்தின் தெரிவித்தார்.

ஹட்டன் டைன் விடுதியில் (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 21 ம் திகதி கிறிஸ்தவ ஆலயங்களிலும், வெளிநாட்டவர்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலியையும் செலுத்துகிறோம்.

குண்டு வெடிப்பையடுத்து நாட்டில் ஏற்பட்ட அசாராதரண சூழ்நிலையால் ஈரோஸ் அமைப்பினால் வடக்கு, கிழக்கு, மலையக பிராந்தியங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட மே 01 ம் திகதி மேதினக்கூட்டங்கள் மற்றும் மே 11 ம் திகதி மலையக தியாகிகள் தின நிகழ்வையும் இரத்து செய்துள்ளோம்.

மக்களை ஆத்திரமூட்டும்வகையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின் கத்தோலிக்க மக்களை மிகுந்த பொருப்புடன் வழிநடத்திய கத்தோலிக்க ஆயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அனைத்து மக்கள் மத்தியிலும் உயர்ந்து நிற்கின்றார்.

சகல இன மக்களும் தங்ளிடையே குரோதங்களை வளர்த்துக்கொள்ளாது மிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதோடு இந்த துன்பகரமான சூழலை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கமும் எதிர்கட்சியும் சிவில் அமைப்புகளும் பாதுகாப்புத்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம். கிருஸ்ணா)  

Mon, 04/29/2019 - 15:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை