நிவ் மிலேனியம் விளையாட்டு கழகம் வெற்றி

பலாங்கொடை பிரதேச விளையாட்டுக் கழகங் களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று கடந்த 30.31ஆம் திகதிகளில் பலாங்கொடை இ/ஜெயிலானி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெற்றது.18 விளையாட்டுக் கழகங்கள் கலந்து கொண்ட இ ப்போட்டி தொடரில் நிவ் மிலேனியம் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது இரண்டாம் இடத்தை யூ கே வைக்கிங் விளையாட்டுக் கழகம் சுவீகரித்துக் கொண்டது.பலாங்கொடை நகர சபை உபதலைவர் எம்.ரீ.எம்.ரூமி சமூக சேவைப் பிரமுகர் எம்.பீ.எம்.முன்சிர் ஆகியோர் நிகழ்வின் அதிதிகளாக கலந்து கொண்டு பரி சில்களையும் வெற்றிக்கேடயங்களையும் வழங்கினர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்).

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை