மத்திய அமெரிக்க நாடுகளுக்கு அமெரிக்காவின் உதவி குறைப்பு

மத்திய அமெரிக்க நாடுகளான எல் சால்வாடோர், குவாதமாலா மற்றும் ஹொன்டுராஸுக்கான உதவிகளை அமெரிக்கா மேலும் குறைக்கவுள்ளது. இந்த நாடுகள் அமெரிக்காவுக்கு குடியேறிகளை அனுப்புவதாக குற்றம்சட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க மற்றும் மெக்சிகோ எல்லையை மூடுவதாக எச்சரித்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு எல்லைக்கு இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த குடியேறிகளின் வருகை அண்மைய தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்த நாடுகள் குடியேறிகளை ஏற்பாடு செய்து அனுப்புவதாக டிரம்ப் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டி இருந்தார்.

மத்திய அமெரிக்கா நாடுகளின் ஸ்திரத்தன்மையை தக்கவைப்பது மற்றும் அந்நாடுகளில் இருந்து குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டே அமெரிக்கா உதவிகளை வழங்கி வருகிறது. எனினும் டிரம்பின் பதவிக் காலத்தில் ஏற்கனவே இந்த உதவிகள் குறைந்துள்ளன.

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை