பந்தயத்தில் சிகிச்சைக்கான பணத்தை இழந்தவர் மோட்டார் சைக்கிள் திருட்டு

தனது சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்து மனைவி அனுப்பிய பணத்தை குதிரைப் பந்தயத்தில் முதலிட்டு  இழந்த நபர், அப்பணத்தை ஈடுசெய்வதற்காக மோட்டார் சைக்கிளொன்றைத் திருடியபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையே (44)  இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

சந்தேக நபரின் மனைவியும் பிள்ளையும் இத்தாலியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சந்தேக நபரின் சிகிச்சைக்காக அவரது மனைவி 160,000ரூபாவை பணத்தை அனுப்பியுள்ளார். மனைவி அனுப்பிய அப்பணத்தை சந்தேக நபர், குதிரைப் பந்தயத்தில் முதலிட்டு இழந்துள்ளார். இழந்த அப்பணத்தை ஈடுசெய்வதற்காக  மோட்டார் சைக்கிளொன்றை குறித்த சந்தேக நபர் திருடியுள்ளார்.

சிலாபம் -குருநாகல் வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சுகவீனமுற்றிருந்த தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துவந்த ஒருவரினது மோட்டார் சைக்கிளையே சந்தேக நபர் திருடியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் திருட்டுப் போனதைத் தொடர்ந்து, அம்மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த ச.Pசீ.டி.வி கமராவில் பதிவாகிய காட்சிகளைப் பார்வையிட்டபோது, மோட்டார் சைக்கிளைத் திருடிய சந்தேக நபர் பற்றிய விபரம் தெரியவந்தது.

மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பாக சிலாபம் பொலிஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை செய்த பொலிஸார், ஆண்டிகம பூனைவிட்டி பிரதேசத்தில் சாஸ்திரம் கூறும் வீடொன்றின் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளதுடன், சந்தேக நபரையும் நேற்று முன்தினம் (14) கைதுசெய்துள்ளனர்.

இச்சந்தேக நபரின் மனைவியும் ஒரே பிள்ளையும் இத்தாலியில் வசிப்பதோடு, சந்தேக நபர் மாத்திரம் இங்கு வசித்துவந்துள்ளார்.

சுகவீனமுற்றிருந்த இச்சந்தேக நபருக்குச் சிகிச்சைக்காக அவரது மனைவி இத்தாலியிலிருந்து 160,000ரூபா பணத்தை அனுப்பியுள்ளார். அப்பணத்தையே சந்தேக குதிரைப் பந்தயத்துக்காக செலவிட்டுள்ளார். இழந்த அப்பணம் தொடர்பாக மனைவிக்குத் தெரியவர முன்னர் அப்;பணத்தைத் தேடிக்கொள்ளும் நோக்கில்  குறித்த மோட்டார் சைக்கிளை திருடியதாக பொலிஸாரின் முறைப்பாட்டில் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் மோட்டார் சைக்கிளில் திருட்டில் ஈடுபட்டு கைதுசெய்யப்படட நிலையில், அவருக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வருவதாகவும்,  பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மோட்டார் சைக்கிள் திருட்டிற்கு சந்தேக நபருக்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றுமொரு நபரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(புத்தளம் விஷேட நிருபர்)

Tue, 04/16/2019 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை