லெவன் பவர் அணிவெற்றி

மூதூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடத்தப்படுகின்ற MCB சவால் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டி (07) பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் முதலாவது அரையிறுதி ஆட்டம் நெஷனல் மற்றும் லெவன் பவர் அணிகளுக்கிடையில் (7) விறுவிறுப்பாக இடம்பெற்றது. இப் போட்டியில் நெஷனல் அணியை வெற்றி கொண்டு முதலாவது அணியாக லெவன் பவர் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியாமை குறிப்பிடத்தக்கதாகும்.

முதலில் துடுப்பெடுத்தாடிய நெஷனல் அணி 20 ஓவர் நிறைவில் 156 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய லெவன் பவர் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து இறுதி ஓவரில் 157 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அதிக பட்சமாக சயான் 71 ஓட்டங்களையும், நவாப் 38 பந்துகளுக்கு 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும். இப்போட்டியின் சிறந்த வீரராக நிப்றாஸ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தொடரில் வெற்றிபெறும் அணிக்கு ஒரு இலட்சம் ரூபா றொக்கப்பணமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தோப்பூர் குறூப் நிருபர்

Thu, 04/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக