வட கொரிய தூதரகத்திற்குள் ஊடுருவிய நபர்களால் சர்ச்சை

ஸ்பெயினில் இருக்கும் வட கொரியத் தூதரகத்தில் சென்ற மாதம் சிலர் பலவந்தமாக நுழைந்ததை பயங்கரவாதத் தாக்குதல் என்று வட கொரிய வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது.

சம்பவம் குறித்துப் பியோங்யாங் முதல்முறையாகக் கருத்துக் கூறியுள்ளது.

அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவும், வட கொரியாவுக்கு எதிரான குழுவும், அந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக ஊகங்கள் நிலவுகின்றன.

அது தொடர்பில், வட கொரியா நிலைமையை அணுக்கமாகக் கவனித்துவருவதாக, அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார். தூதரகச் சம்பவம் பற்றிய விசாரணை இடம்பெறவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை