மலேசியாவில் ரொஹிங்கிய அகதி குழு தடுத்துவைப்பு

மலேசியாவின் வடக்கு கடலோரப் பகுதியில் ரொஹிங்கிய அகதிகள் என்று நம்பப்படும் 37 பேரை மலேசிய பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்துள்ளனர்.

ரொஹிங்கிய அகதிகள் கடல் வழியாக மலேசியாவுக்கு வர ஆரம்பித்திருப்பதால், மீண்டும் ஆள் கடத்தல் தொழில் தீவிரமாக நடந்து வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சுங்காய் பெலாட்டி பகுதியில் கடந்த மாதம் அகதிகள் 35 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

பெரிய படகில் அகதிகளை ஏற்றிவந்து பின்னர் கடலின் ஒரு பகுதியில் அவர்களைப் பல குழுக்களாகப் பிரித்து சிறிய படகுகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளில் அவர்கள் கரை சேர்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிடிப்பட்ட அகதிகளின் உடல் நலம் சீராக உள்ளது. அவர்கள் குடிநுழைவுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று பாதுகாப்பு படை கூறியது. மியன்மார் ரகினே மாநிலத்தில் இராணுவத்தின் கெடுபிடியை அடுத்து 2017 ஆம் ஆண்டு அங்கிருந்து 700,000க்கும் அதிகமான ரொஹிங்கியர்கள் எல்லை கடந்து பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றனர்.

துணைக் கண்டத்தின் சட்டவிரோத குடியேறிகளாகவே ரொஹிங்கியர்களை மியன்மார் கருதுகிறது. அவர்களுக்கு எதிரான வன்முறைகள் காரணமாக பலரும் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை