புதிய ஜனாதிபதிக்கு எதிராக அல்ஜீரியாவில் ஆர்ப்பாட்டம்

அல்ஜீரியாவில் புதிய இடைக்கால ஜனாதிபதியின் நியமனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அல்ஜீரிய பொலிஸார் தண்ணீர் பீச்சியடித்துள்ளனர்.

அல்ஜீரியாவின் நீண்டகால பிரதமர் அப்தலஸிஸ் பெளத்பிலிக்கா கடந்த வாரம் பதவி விலகியதை அடுத்து பாராளுமன்ற மேலவை சபாநாயகர் அப்தல்காதர் பென்சலாஹ் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல வாரங்களாக அமைதியான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் பல ஆர்ப்பாட்டக்காரர்களும் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். எனினும் 90 நாட்களுக்குள் சுயாதீனமான தேர்தல் ஒன்றை நடத்துவதாக பென்சலாஹ் வாக்குறுதி அளித்துள்ளார்.

எனினும் அவர் நியமிக்கப்பட்ட விரைவில் தலைநகர் அல்ஜியர்ஸில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பென்சலாஹ்வை வெளியேறும்படி கோசம் எழுப்பினர்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதிக்கு மிக நெருக்கமானவராக 77 வயது பென்சலாஹ் உள்ளார்.

Thu, 04/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை