கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் றியல் நியூ ஸ்டார் ரெட் அணி வெற்றி

தொடரின் சிறந்த ஆட்டநாயகன் றியாஸ்

அட்டாளைச்சேனை றியல் நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் முப்பெரும் விழா கடந்த 7ஆம் திகதி அட்டாளைச்சேனை கடற்கரை பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கழகத்தின் தலைவர் அமீன் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெற்றது.

றியல் நியூ ஸ்டார் கழகம் நடாத்திய உள்ளக வீரர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டிக்கு றியல் நியூ ஸ்டார் ரெட், கிரீன் ஆகிய அணியினர் தெரிவு செய்யப்பட்டனர். இவ் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ரெட் அணியினர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர். அணிக்கு 09பேர் 8ஓவர்கள் கொண்ட போட்டியில் 8ஓவர்கள் முடிவில் ரெட் அணியினர் 5 விக்கட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிறீன் அணியினர் 8 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 42ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். 18ஓட்ட வித்தியாசத்தில் கிறீன் அணியினர் தோல்வியை தழுவிக்கொண்டனர்.

தொடரின் சிறந்த ஆட்டநாயகன் விருது அதிபரும், ஊடகவியலாருமான எம்.ஐ.எம்.றியாஸ் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் சகலதுறை வீரராக எம்.எம்.முஷாபிர் தெரிவு செய்யப்பட்டார்.

தொடரில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த றியல் நியூ ஸ்டார் ரெட் அணிக்கான வெற்றிக்கிண்ணத்தை நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியோர் இணைந்து வழங்கிவைத்தனர்.

நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா , உறுப்பினர்கள் தமீம் ஆப்தீன், ஜெமீலா ஹமீட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒலுவில் மத்திய விசேட,பாலமுனை விசேட நிருபர்கள்

Thu, 04/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை