மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் "நாட்டிற்காக ஒன்றினைவோம்" தேசிய திட்டத்திற்கு அமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை(09) மட்டக்களப்பு ஓய்வூதிய திணைக்களம் நடமாடும் சேவையை நடத்தியது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணியளவில் இச்சேவை இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் ஓய்வூதியம் சம்பந்தமான பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் பற்றி ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் ஓய்வூதிய திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் ரத்நாயக்க,மாவட்ட ஓய்வூதிய திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஞானதயாளன்,மாவட்ட பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

Thu, 04/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக