பாதுகாப்புச் செயலாளர் இராஜினாமா

பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ நேற்று மாலை தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்த உத்தரவின் பிரகாரமே இவர் தமது பதவியை இராஜனாமா செய்தார்.

புனித ஈஸ்டர் திருநாளன்று தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் எட்டு இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் உள்நாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு மகாநாயக்க தேரர்களும் அரசியல்வாதிகளும், பேராயர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், பயங்கரவாதத் தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தப்பின்னணியிலே இவரைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி நேற்றுமுன்தினம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தமது பதவியை பாதுகாப்புச் செயலாளர் நேற்று மாலை இராஜினாமா செய்துள்ளார். இராஜனாமா கடிதத்தையும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

புதிய பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்ணாயக்கவை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆலோசித்துள்ளதாக அறிய முடிகிறது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 04/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை