மஹவை - ஓமந்தைவரை ரயில் பாதை அமைக்க இந்தியக் கம்பனியுடன் ஒப்பந்தம்

மஹவையில் இருந்து ஓமந்தை வரையில் ஆகக்கூடிய எடைகளைத் தாங்கக்கூடிய ரயில் பாதையை அமைக்கும் ஒப்பந்தத்தை இர்கோன் இன்டர்நஷனல் நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

வடமாகாணத்திற்கு செயல்திறன் பாதூப்பு மற்றும் சிறந்த பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துகளை மேற்கொள்ளும் எதிர்பார்ப்புடன் மணித்தியாலயத்திற்கு 100கிலோமீற்றர் வேகத்தில் ரயில் பயணிக்கக்கூடிய, ஆகக் கூடுதலான எடைகளை தாங்கக்கூடிய ரயில் பாதையொன்றை நிர்மாணிப்பதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 128கிலோமீற்றர் தூரமான ரயில் பாதை இந்தியாவின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ளது. இதற்கு அமைவாக இந்த பாதையை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கமைய 91.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இர்கோன் இன்டர்நஷனல் நிறுவனத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது 

இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

(நமது நிருபர்)  

Thu, 04/04/2019 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை