பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல்,  மேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று  பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தோடு அநுராதபுரம், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் . 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கமைய சப்ரகமுவ, மத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர்  மழை வீழ்ச்சி பதிவாகுமென்று எதிர்பார்க்கப்படுவதோடு, பலத்த மின்னல் தாக்கம் இடம்பெறும்; சாத்தியமும் காணப்படுகின்றது.

அத்தோடு மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில்; குறித்த இடங்களில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

ஆகவே, மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, சூரியனின் வடதிசை நோக்கிய  நகர்வு காரணமாக ஏப்ரல் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுத்து வருகின்றது. இதற்கமைய  வணாத்தவில்லு, ஒத்தப்புவ, சியம்பலகஸ்வெவ, கட்டமுறிச்சான, ரம்பேவ மற்றும் மீகஸ்வெவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக இன்றைய தினம் (11)  நண்பகல் 12.10 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

Thu, 04/11/2019 - 10:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை