பங்களாதேஷ் அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடைபெறும் உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இடம் பெறாமல் இருந்த சகீப் அல் ஹசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், உப தலைவர் மஷ்ரபி மோர்தசா, சகலதுறை வீரர் மோசதக் ஹுசைன், டெஸ்ட் போட்டியில் மட்டும் இடம் பெற்று வந்த அபு ஜயத் அணியில் வாய்ப்புப் பெற்றுள்ளனர்.

பங்களாதேஷ் அணி விபரம்:

மஷ்ரபி மோர்தசா (தலைவர்), தமிம் இக்பால், லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் காப்பாளர்), சகீப் அல் ஹசன் (உப தலைவர்), முகமது மிதுன், சபிர் ரஹ்மான், மொசாடக் ஹுசைன், முகமது சைபுதீன், மெகதி ஹசன் மிராஸ், ருபெல் ஹுசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், அபு ஜயத்.

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை