லேக்ஹவுஸ் நிறுவனத்தில்

போதையை ஒழிக்கும் ஜனாதிபதியின் துணிச்சலான முடிவை வரலாறு பேசும்

நாட்டின் சரித்திரத்தில் முதற்தடவையாக அனைவரும் இணைந்து ஒரே நேரத்தில் ‘போதைக்கு எதிராக’ உறுதிமொழி எடுத்துள்ளமை பாரிய வெற்றியென லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் கிரிஷாந்தகுரே தெரிவித்தார்.போதை ஒழிப்புக்கான சித்திரை உறுதிமொழி வழங்கும் தேசிய நிகழ்வுகள் நேற்று நாடு முழுவது இடம்பெற்றன.இதனையொட்டி லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நடந்த சித்திரை உறுதி மொழி நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இங்கு பேசிய அவர்,

போதைப் பொருள் பாவனை முழுநாட்டையுமே ஆக்கிரமித்துள்ளது. நாட்டில் இடம்பெற்ற யுத்தங்களையும் விட போதைப் பொருள் பாரிய ஆபத்தாகவுள்ளது. இதை இல்லாதொழிக்க ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையை எதிர்கால சந்தத்தியும் கௌரவத்துடன் நினைவுகூரும்.

யுத்தத்தில் உயிரிழப்பது,அங்கவீனமடைவது தாய் நாட்டுக்காக உயிர்நீத்த பெருமையைத் தேடித்தரும். ஆனால் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை இழப்பது பெருமைப்பட முடியாத விடயம்.

இன்று சரித்திர முக்கியத்துவம்வாய்ந்த நாள். நாட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் போதைக்கு எதிராக உறுதி மொழி எடுக்கின்றனர்.

சரித்திரத்திலே என்றுமில்லாதவாறு போதைப் பொருளுக்கு எதிராக பாரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியே இதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

எதிர்கால சந்ததிக்காக அவர் ஆற்றும் பெறுமதி மிக்க பணி இதுவாகும்.

இப்பிரச்சினையைத் தீர்க்க இதுவரைக்கும் யாரும் நேரடியாக முன்வரவில்லை. ஜனாதிபதியின் தலைமையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

20 வருடங்கள் யுத்தம் செய்தோம். அந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கில் உயிர்களை இழந்தோம். சிலர் அங்கவீனர்களாகினர். யுத்தத்துக்குச் சென்ற மகன் திரும்பி வருவானா, கணவர் வருவாரா, தந்தை வருவாரா எனச் சந்தேகத்துடன் இருந்ததைப்போல் போதைக்கு அடிமையாகியுள்ள பிள்ளைகளின் பெற்றோர் கண்ணீருடன் காலம் கழிக்கின்றனர்.

யுத்தத்தைவிட பாரிய பிரச்சினையாக போதையுள்ளது. இவற்றை இல்லாதொழிக்கும் ஜனாதிபதியின் முயற்சிக்கு சகலரும் கட்சி பேதமின்றி ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை