உலகக் கிண்ண ஆஸி. அணியில் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடம்

உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி, ஓராண்டு தடை விதிக்கப்பட்ட டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் வருமாறு:- ஆரோன் பிஞ்ச் (தலைவர்) டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா , ஸ்டீவ் ஸ்மித், ஷோன் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், நேதன் கோல்டர் நைல், ஜேசன் பெர்ண்டோர்ப், ஆடம் சாம்பா மற்றும் நெதன் லயன்.

கடந்த உலக கிண்ணத்தில் அணியில் முக்கிய வீரராக திகழ்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் ஹேசல்வுட் மற்றும் இந்தியாவுடன் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெறாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை