அமெரிக்க குடியுரிமை இரத்து விவகாரம் வெற்றி

கோட்டாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜித மறுப்பு

நாடு திரும்பிய கோட்டா தெரிவிப்பு

அமெரிக்கக் குடியுரிமையை இரத்து செய்யவே நான் அமெரிக்கா சென்றிருந்தேன். ஆனால், இங்குள்ள சிலரும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இணைந்து எனக்கு எதிராக சிவில் வழக்ெகான்றை தாக்கல் செய்துள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இவர் நேற்று அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார். தமது அமெரிக்க பிரஜாவுரிமையை இரத்து செய்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த அவர், நேற்று நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு சர்வமத வழிப்பாடுகளுடன் பெரு வரவேற்பளிக்கப்பட்டது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்புலத்திலேயே அவர் தமது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்ஷ விமான நிலையத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்ைகயில், எனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யும் முகமாகவே நான் அமெரிக்கா சென்றிருந்தேன். அங்குள்ள எனது சட்டத்தரணிகளுடன் ஆலோசனை செய்து அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளேன்.

ஆனால், நான் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற இரண்டு குற்றச்செயல்களுக்கு நான் பொறுப்புக்கூற வேண்டுமென வலியுறுத்தி இங்குள்ள சிலரும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் எனக்கு எதிராக சிவில் வழக்ெகாண்றை அமெரிக்காவில் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு கலிபோர்னியாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகம் உடந்தையாக இருக்கிறது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ராஜித சேனாரட்ண,

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளில் பின்புலத்தில் கலிப்போர்னிய கொன்சியூலர் அலுவலகமும் இருந்துள்ளதாக அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அவரது குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்றும் கூறியுள்ளார். அங்குள்ள கொன்சியூலர் என்னுடன் தொடர்புக்கொண்டு இந்த வழக்குகளுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனக் கூறினார். கலிப்போர்னியாவுக்கான கொன்சியூலராக நியமிக்கப்பட்டுள்ளவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க பணிப்பாளர்களில் ஒருவராகச் செயற்பட்டிருந்த லக்ஷ்மன் பிரேமசந்திரவே ஆகும். அதனைப் பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுப்பதுடன் இந்த விவகாரத்தின் பின்புலத்தில் கலிப்போர்னியாவுக்கான கொன்சியூலர் அலுவலகம் இல்லை என்பதை உறுதியாக கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 04/13/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக