லிபிய மோதல்: ஐ.நா யுத்த குற்ற எச்சரிக்கை

லிபியாவில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் யுத்த குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிசெல் பெசலட் எச்சரித்துள்ளார்.

கலீபா ஹப்தரின் படை ஐ.நா அங்கீகாரம் அளித்த திரிபோலி அரசை நோக்கி முன்னேறி வரும் நிலையில் அனைத்து தரப்புகளும் வன்முறைகளை நிறுத்தும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மோதல்களால் கடந்த மூன்று தினங்களில் சுமார் 45 பேர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தலைநகருக்கு நெருக்கமாக விமான நிலைத்தின் மீது கடந்த திங்கட்கிழமை ஹப்தர் படை வான் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ள லிபிய சமாதான மாநாடு பிற்போடப்பட வாய்ப்பு இருப்பதாக லிபியாவுக்கான ஐ.நா விசேட தூதுவர் கஸ்ஸாம் சலம் குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு முன்னாள் சர்வாதிகாரி முஅம்மர் கடாபி அரசு கவிழ்க்கப்பட்டு அவர் கொல்லப்பட்டது தொடக்கம் லிபியாவில் வன்முறை மற்றும் அரசியல் ஸ்திமற்ற சூழல் நீடித்து வருகிறது.

Thu, 04/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை