அதிக சத்தம் எழுப்பும் ஒலியெழுப்பி வாகனங்களை கட்டுப்படுத்த கடும் சட்டம்

ஒலியை மாசடையச் செய்யும் அதிக சத்தம் எழுப்பும் ஒலியெழுப்பிகளை (ஹோண்) கட்டுப்படுத்த கடும் சட்டங்கள் அறிமுகம் செய்யப் படவுள்ளது.இதை முன்னிட்டு அதிக ஒலி எழுப்பும் வானங்களை சுற்றி வளைக்க பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்து தலைமையில் அண்மையில் (05) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  

சூழல் மாசடைதலின் ஒரு அம்சமான ஒலி மாசடைதலை தடுக்கவும் எதிர்காலத்தில் அபிவிருத்தியடைந்த ஒழுக்கமான நாட்டை உருவாக்கவும் எடுக்க வேண்டிய குறுகிய கால நீண்டகால நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆராயப்பட்டன.   

வாகன சட்டவிதிகளை மீறல் மற்றும் டெஸிபல் 105க்கு அதிகமான ஹோர்ன் தொடர்பாக தேவையான சட்டத்தை செயற்படுத்த இலங்கையிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் அறிவுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

இது தவிர நாட்டின் அனைத்து பாடசாலை மாணவர்கள், அனைத்து பயணிகள் மற்றும் சாரதிகளை இணைத்து அமைதியான தினமொன்றை பிரகடனப்படுத்துவது தொடர்பாகவும்  இங்கு கலந்துரையாடப்பட்டது. 

இதில் கலந்து கொண்ட தனியார் பஸ் வண்டி உரிமையாளர் சங்கங்கள், மற்றும் நிறுவனங்கள் என்பன இச்சட்டத்தை செயற்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளன.    

Mon, 04/08/2019 - 13:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை