சிரியாவில் இருந்து கொசோவோ ஐ.எஸ் நபர்கள் வரவழைப்பு

ஐ.எஸ் குழுவுடன் தொடர்புடைய கொசோவோ நாட்டின் 110 பிரஜைகளை சிரியாவில் இருந்து அந்த நாடு திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. பெரும்பாலும் தாய்மார் மற்றும் குழந்தைகள் கொண்ட இந்தக் குழவில் பல ஜிஹாதி போராளிகளும் இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

74 சிறுவர்கள், 32 பெண்கள் மற்றும் ஐ.எஸ் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

அமெரிக்க இராணுவத்தின் உதவியோடு கொசோவோவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட இந்த குழுவினர் பொலிஸாரினால் இராணுவ முகம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

2008 ஆம் ஆண்டு செர்பியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற கொசோவோவில் 90 வீதமானவர்கள் முஸ்லிம்களாவர். 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 300க்கும் அதிகமான கொசோவோ நாட்டவர்கள் சிரியாவுக்கு பயணித்திருப்பதாக அந்நாட்டு அரச தரவுகள் குறிப்பிடுகின்றன.

Mon, 04/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை