அரசியலமைப்புப் பேரவைக்கு சம்பந்தனின் பெயர் பரிந்துரை

அரசியலமைப்புப் பேரவையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

அரசிலமைப்புப் பேரவை நேற்று  பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது. ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சம்பந்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பதவி வழியில் இரா. சம்பந்தன் அரசியலமைப்பு

பேரவைக்கு நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட நிலையில் இரா.சம்பந்தனின் பதவி இரத்தானது. எவ்வாறாயினும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கு சமல் ராஜபக்ஷவும் அறிவித்திருந்தார்.  இதேவேளை அரசியலமைப்பு பேரவை மீண்டும் ஏப்ரல் இறுதியில் கூடவுள்ளதுடன் இதன்போது வெற்றிடமாகவுள்ள பிரதம நீதியரசர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகியோருக்கான பெயர்கள் தொடர்பாக ஆராயப்பட இருக்கிறது.   

(சபை நிருபர்கள்)

Sat, 04/06/2019 - 08:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை