சவூதி வான் தாக்குதலில் யெமனில் பலர் உயிரிழப்பு

யெமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள தலைநகர் சனா மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி நடத்திய வான் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 11 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் 39 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வீடுகள் மற்றும் பாடசாலைகள் மீது வீசப்பட்ட குண்டுகளில் மாணவர்களே அதிகம் உயிரிழந்திருப்பதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“எல்லோருமே பீதி அடைந்தனர் சிலர் பயத்தில் கூச்சலிட்டனர்” என்று அல் ரயிஸ் பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டார். “2100 வரையான மாணவர்கள் கற்கும் பாடசாலையின் நிலைமை பயங்கரமாக இருந்தது.

ஏவுகணை தாக்குதலால் சில மாணவிகள் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு பாடசாலை கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சனா புறநகர் பகுதியான சவானில் இருக்கும் இராணுவ முகாம் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூத்தி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வரும் சவூதி கூட்டணி குறிப்பிட்டுள்ளது.

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை