பஞ்சாப் அணி அபார வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐ.பி.எல் டி20 லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

பஞ்சாப் கிரிக்கெட் சங்க அரங்கில்் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக முருகன் அஷ்வின் இடம் பெற்றார். மும்பை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் குவித்தது. குவின்டன் டி கொக் அதிகபட்சமாக 60 ஓட்டங்கள் விளாசினார். அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 32 ஓட்டங்கள், ஹர்திக் பாண்டியா 31 ஓட்டங்கள் எடுத்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் முருகன் அஷ்வின், வில்ஜோயன், ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கே.எல். ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 53 ஓட்டங்கள் சேர்த்து வலுவான ஆரம்பத்தை கொடுத்தது. கிறிஸ் கெயில் 40 ஓட்டங்கள் விளாசி குருணல் பந்துவீச்சில் ஹர்திக் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த மயாங்க் அகர்வாலும் அதிரடியில் இறங்க, பஞ்சாப் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது. அகர்வால் 43 ஓட்டங்கள் விளாசி அரங்கு திரும்பினார். பொறுப்புடன் விளையாடிய ராகுல் அரை சதம் அடித்தார்.

பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்து வென்றது. ராகுல் 71 ஓட்டங்கள் டேவிட் மில்லர் 15 ஓட்டங்களுடன்் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் பஞ்சாப் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை