டிரம்பின் அமைச்சரவையில் இருந்து மற்றொருவர் விலகல்

அமெரிக்க–மெக்சிகோ எல்லைப்பகுதியைக் கடந்து செல்லும் மெக்சிகோ நாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிர்ஸ்ட்ஜென் நீல்சன் பதவி விலகியுள்ளார். நீல்சனைப் பதவி விலகும்படி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதற்கு அவர் இசைந்ததாக மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிர்ஸ்ட்ஜென் நீல்சன் பதவி விலகுகிறார். அவரது சேவைக்காக நான் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் சுங்கத்துறை, எல்லைப்பகுதி பாதுகாப்பு ஆணையாளர் கெவின் மெக்கலீனன் அந்தப் பதவியின் தற்காலிக செயலாளராக பணியாற்றுவார் என்று டிரம்ப் கூறினார்.

டிரம்பின் அமைச்சரவையிலிருந்து இதுபோன்று பலர் விலகியுள்ளனர். முன்னாள் தளபதி ஜேம்ஸ் மெட்டிசுக்குப் பின்னர் பாதுகாப்புச் செயலாளர் பொறுப்புக்கு இதுவரை எவரும் அமர்த்தப்படவில்லை.

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை