அம்பாறையில் வரட்சியால் பாதிக்கப்படும் பிரதேசங்களுக்கு குடிநீர் பௌசர்கள்

அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்படும் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக முதற்கட்டமாக நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் பௌசர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியினால் பாதிக்கப்படும் பதியத்தலாவ, உகன, பொத்துவில், நாவிதன்வெளி, ஆகிய பிரதேச செயலகங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அந்தந்தப் பிரதேச செயலாளர்களிடம் கடந்த வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.எம். பண்டாரநாயக்கா உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.

வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் பொது நிர்வாக மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் குடிநீர் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கடும் வரட்சி நிலவுவதால் அம்பாறை மாவட்டத்தில் எதிர்காலத்தில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் எனவும் அவர் கூறினார்.

வரட்சியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச சபைகள் என்பன தயார் நிலையில் உள்ளதாகவும், உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

 

ஒலுவில் விசேட நிருபர்

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை