கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்று ராஜஸ்தான் அணித் தலைவர் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆரம்ப வீரர்களாக கிரிஸ் லயனும், கில்லும் களமிறங்கினர். ஆரோன் வீசிய முதல் ஓவரின் 3ஆவது பந்திலேயே லயன் போல்டானார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸல், சுனில் நரைன் மற்றும் பரத்வொயிட் உள்ளிட்டோரும் ஏமாற்றம் தந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் ஆடி ஓட்டங்கள் சேர்த்தார். கடைசிகட்ட ஒவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்டார்.

இதனால், கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களை சேர்த்தது. தினேஷ் கார்த்திக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 50 பந்துகளில் (7 பவுண்டரி, 9 சிக்சர்) 97 ஓட்டங்களை எடுத்து 3 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டார்.

வெற்றிக்கு 176 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 19.2 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இளம் வீரர் ரியான் பராக் அதிரடியாக ஆடி 47 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் படி, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், அதே 8 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி 6ஆவது இடத்திலும், பெங்களுர் அணி 8ஆவது இடத்திலும் நீடிக்கின்றன.

Sat, 04/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை