போதைப் பொருளுக்கு எதிரான நிகழ்ச்சித் திட்டம் இன்று முதல் தீவிரம்

போதையிலிருந்து விடுதலைபெற 'சித்திரை மாத உறுதிமொழி' இன்று

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான “சித்திரை மாத உறுதிமொழி” இன்று காலை 08.15க்கு ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது. 

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொண்டு, முன்னேற்றமான சமூக, பொருளாதார அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தும் முயற்சியில் மிக முக்கியமானதொரு இலக்காக 'போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு' என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் அனைத்து துறைகளினதும் ஒத்துழைப்புடன் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.  

பாரிய அனர்த்தமாக நாட்டில் பரவி வரும் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தினை பொலிசார் உள்ளிட்ட ஏனைய அரச துறையினால் மாத்திரம் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. எனவே குடும்ப கட்டமைப்பிலிருந்து சமூக கட்டமைப்பு வரை விரிவானதொரு கருத்து மாற்றத்துடனும் நேரடி பங்களிப்புடனும் இந்த பேரழிவை ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் எண்ணமாகும்.  

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் “சித்திரை மாத உறுதிமொழி” இன்று இடம்பெறவுள்ளது.  

அதன் பிரதான வைபவம் இன்று 03ஆம் திகதி மு.ப.08.15க்கு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளதுடன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இவ்வைபவத்தில் பங்குபற்றவுள்ளனர்.  

இந்த நிகழ்வு இலத்திரனியல் ஊடகங்களின் வாயிலாக நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்படுவதோடு, அதனுடன் இணைந்ததாக தத்தமது நிறுவனங்களிலிருந்து அரச சேவையாளர்கள், பொதுமக்கள், பாடசாலை பிள்ளைகள் ஆகிய அனைவரும் இந்த சித்திரை மாத உறுதிமொழியை மேற்கொள்ளவுள்ளனர்.  

போதைப்பொருள் அழிவிலிருந்து நாட்டை விடுதலை செய்து, சௌபாக்கியமிக்க இலங்கையை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ள இந்த தேசிய பணியை மேலும் வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் எவ்வித பேதங்களுமின்றி இணைந்துகொள்ளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

சித்திரை மாத உறுதிமொழியுடன் போதைக்கு எதிரான நிகழ்ச்சித்திட்டத்தை அனைத்து பிரிவுகளினதும் ஒத்துழைப்புடன் பலமாக முன்னெடுக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் நோக்கமாகும். 

Wed, 04/03/2019 - 08:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை