கருந்துளையின் முதல் படத்தை வெளியிட விஞ்ஞானிகள் தயார்

கருந்துளையின் முதலாவது உண்மையான புகைப்படத்தை ஏப்ரல் 10 ஆம் திகதி விஞ்ஞானிகள் வெளியிட உள்ளனர்.

ஒளியைக் கூட விட்டு வைக்காத அதீத ஈர்ப்பு விசையைக் கொண்ட கருந்துளைகள் தற்போது வரை கோட்பாட்டின் படியே உருவகப்படுத்தப்பட்டுள்ளன. ஒளியைக் கூட இவை விட்டு வைக்காது என்பதால் இவற்றைக் கண்டறிவது மிகக்கடினம்.

ஆனால் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளைக் கொண்ட ஒரு அமைப்பானது, கருந்துளைகளைச் சுற்றிய நிகழ்வெல்லையைக் கண்டறியும் தொலைநோக்கியுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அந்தக் குழுவானது ஏப்ரல் 10ஆம் திகதி அன்று செய்தியாளர்களை சந்திக்கவுள்ளது.

பிரசல்ஸ், சன்டியாகோ, சங்காய் மற்றும் டோக்கியோ நகரங்களில் சம காலத்தில் இந்த செய்தியாளர் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

அப்போது கருந்துளையின் உண்மையான புகைப்படத்தையும், கருந்துளையை சுற்றி எப்படி இருக்கும் என்பது தொடர்பாக புகைப்படத்தையும் வெளியிட உள்ளது.

1700களில் இருள் நட்சத்தரம் என்ற கோட்பாட்டுடன் ஆரம்பமான கருந்துளை பற்றிய தேடலில் அது இருப்பதற்கான ஆதாரங்கள் படிப்படியாக வெளியாக ஆரம்பித்தன.

இன்று புரிந்து கொள்ளப்பட்டவாறான கருந்துளை பற்றிய விளக்கம் 1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் முன்மொழிந்த பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்தே பெறப்பட்டதாகும்.

1967இல் முதன் முதலாக ஜோன் வீலர் என்ற பெளதீகவியலாளர் கருந்துளை என்ற பதத்தினை பயன்படுத்தினர். அதாவது பெரிய விண்மீன் ஒன்று தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு சுப்பர்நோவா என்ற பெருவெடிப்பின் மூலம் இறக்கும் பொது, மிக அடர்த்தியான சிறிய மையப்பகுதியை விட்டுச் செல்லும். இந்த சிறிய மையக்கோளத்தின் அடர்த்தியானது நமது சூரியனது அடர்த்தியை விட மூன்று மடங்குக்கு அதிகமாக இருப்பின், அது கருந்துளையாக மாறிவிடும் என்று ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாடு கூறுகிறது.

Mon, 04/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை