காசாவின் மிருகக்காட்சி சாலையில் இருந்து விலங்குகள் வெளியேற்றம்

காசா மிருகக்காட்சி சாலையில் மோசமான நிலையில் இருந்த 40க்கும் அதிகமான விலங்குகள் ஜோர்தானுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டதாக நலன்புரி அமைப்பொன்று அறிவித்துள்ளது.

எகிப்துக்கு அருகில் அமைந்திருக்கும் ரபா மிருகக்காட்சி சாலையில் இருந்தே இந்த விலங்குகள் வெளியேற்றப்பட்டதாக ‘போர் போவ்ஸ்’ என்ற அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சிங்கங்கள், குரங்குகள், மயில்கள் மற்றும் முள்ளம்பன்றிகள் என 47 உயிரினங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விலங்குகளை எடுத்துச் செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்ததை அடுத்து 300 கிலோமீற்றர் தூரம் பயணித்து இந்த விலங்குகள் இடமாற்றப்பட்டுள்ளன.

விலங்குகளை வைத்திருப்பதற்கான கூடுகள் அதிகம் சிறிதாக இருந்ததாக போர் போவ்ஸ் அமைப்பின் விலங்கு மருத்துவரான அமீர் கலீல் குறிப்பிட்டார்.

பறவை இனங்கள் மாத்திரமே அந்த மிருகக்காட்சி சாலையில் விடப்பட்டுள்ளன. இங்கிருந்து காப்பாற்றப்பட்ட இரு சிங்கங்களும் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்படவுள்ளன. ரபா மிருகக்காட்சிசாலை 1999 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்குள்ள மிருகங்கள் மோசமான நிலையில் இருப்பது குறித்து போர் போவ்ஸ் இந்த ஆண்டு ஆரம்பத்தில் தனது அவதானத்தை செலுத்தியது. சிங்கம் ஒன்றின் நகங்கள் காவலர்களால் அகற்றப்பட்டு வருகையாளர்களுக்கு அதனுடன் விளையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது குறித்து போர் போவ்ஸ் கவலையை வெளியிட்டிருந்தது.

இந்த மிருகக் காட்சிசாலையின் உரிமையாளரான பாத்தி ஜமா மீது விலங்கு உரிமை குழுக்கள் குற்றம்சாட்டியபோதும் இந்த நிமைக்கு இஸ்ரேலின் முற்றுகை காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் வளர்த்த பூனை ஒன்றை இழந்தாலே நாம் வேதனை அடைகிறோம். 20 ஆண்டுகளுக்கு மேல் என்னுடன் வாழ்ந்த விலங்குகளை திடீரென்று இழந்தால் எப்படி இருக்கும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை