இளஞ்சிவப்பாக மாறிய ஏரி

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள வெஸ்ட் கேட் ஏரியின் நிறம் இளஞ்சிவப்பாக மாறியிருப்பது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

உப்பு நீர் அடங்கிய இந்த செயற்கை ஏரியின் நிறம் இளஞ்சிவப்பாக மாறுவதற்கு ஒரு வகை நீர்ப்பாசி காரணமாகும். அதிகமான வெப்பம், சூரிய வெளிச்சம் ஆகியவற்றால் நீர்ப்பாசி நிறம் மாறியுள்ளது.

ஏரியின் சிறப்பு வண்ணத்தைக் காண மக்கள் திரளாகச் செல்கின்றனர். எரியைப் பின்னணியாகக் கொண்டு படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

ஏரிக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு பூங்கா அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். வெப்பநிலை குறையும்போது ஏரி மீண்டும் வழக்கமான நிறத்துக்கு மாறிவிடும்.

இதற்கு முன் 2017ஆம் ஆண்டு ஏரி நிறம் மாறியது. ஸ்பெயின், கனடா, செனகல் போன்ற நாடுகளிலும் இளஞ்சிவப்பு ஏரிகளைக் காணலாம்.

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை